உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் நாளை சம்ப்ரோட்சணம்!

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் நாளை சம்ப்ரோட்சணம்!

செங்கல்பட்டு : சிங்கப்பெருமாள் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், நாளை, சம்ப்ரோட்சண விழா நடைபெறுகிறது. சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. அந்த கோவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 60 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் நடந்தன. கடந்த, 14ம் தேதி, திருப்பணிகள் முடிந்ததை அடுத்த, 15ம் தேதி, மாலை, சம்ப்ரோட்சணம் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் துவங்கின. நாளை காலை, 7:00 மணிக்கு (நாளை), விஸ்வரூபம், காலை, 8:45 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, காலை, 9:15 மணிக்கு, கும்பங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு, நரசிம்மபெருமாள், அஹோபிலவல்லி தாயார், ஆண்டாள், பக்த ஆஞ்சநேய சுவாமி சன்னிதிகளின் விமானங்களுக்கு சம்ப்ரோட்சணம், காலை 10:40 மணிக்கு, வேத, திவ்ய பிரபந்த சாத்துமுறை, 11:00 மணிக்கு, பக்தர்களுக்கு தரிசனம், மாலை 5:00 மணிக்கு, பிரஹலாதவரதர் அஹோபிலவல்லி தாயருக்கு திருக்கல்யண உற்சவம், இரவு 8:00 மணிக்கு, சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், பிரஹலாதவரதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !