உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்!

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவ விழா நேற்று நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழா பிப்.,27ல் துவங்கியது. பூ அலங்கார மண்டகப்படியினரால், பூத்தமலர் பூ அலங்கார விழா மற்றும் பூச்சொரிதல் விழா நடந்தது. மார்ச் 1 ல் அம்மனுக்கு பாலாபிஷேகம், மார்ச் 2ல் சாட்டுதல் நிகழ்ச்சி, மார்ச் 3 ல் தீப அலங்கார நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 4 ல், திருமாங்கல்யம், மஞ்சல்புடவை அம்மனுக்கு சாத்துப்படி செய்தல், பாலக்கொம்பு ஊன்றுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மார்ச்18 வரை, மண்டகப்படி வாரியாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிறைவுநாளான நேற்று, தெப்ப உற்சவம் நடந்தது. லட்சுமி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !