உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: இன்று துவக்கம்!

ஸ்ரீவி.,பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: இன்று துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலையில் கணபதி அனுக்ஞை பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் நடக்கிறது. காலை 7 மணிக்கு கொடிப்பட்டம் நகர் வலம் வருதல், 9.05 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம், அபிஷேகம், அலங்கார தீபராதனை நடக்கிறது. விழா நாட்களில், இரவில் பல்வேறு வாகனத்தில், அம்மன் வலம் வருதல் நடக்கிறது. 25ம் தேதி இரவு 10 மணிக்கு, பூபல்லக்கில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 30ம் தேதி, பூக்குழி இறங்குதல் நடக்கிறது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டத்திலிருந்து , 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, நிர்வாக அதிகாரி லதா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !