உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவில் மண்டல பூஜை பூர்த்தி

ராகவேந்திரர் கோவில் மண்டல பூஜை பூர்த்தி

திருக்கோவிலூர்: விழுப்பும் மாவட்டம், திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் புதிதாக கட்டப்பட்ட ராகவேந்திரர் கோவிலில் மண்டலபூஜை பூர்த்தி விழா நடந்தது.திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் ராகவேந்திரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான மண்டல பூஜை விழா கடந்த 48 நாட்களாக நடந்தது. நிறைவாக மண்டலபூஜை பூர்த்தி விழா நேற்று நடந்தது.காலை 7 மணிக்கு வேதமந்திரம் முழங்க கலச ஸ்தாபனம், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், ராகவேந் திரர் ஹோமங்கள் நடந்தது. 10 மணிக்கு மகா பூர்ணாகுதி முடிந்து திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர், ராகவேந்திரர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் கோபிகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !