உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

சுபத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

கம்பம் : காமயகவுண்டன்பட்டி சுபத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகள், இங்குள்ள கருப்பசாமிகோயில் தெரு, இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மகளிர் முன்னேற்ற சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 17ந்தேதி முதல் யாகபூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை யாக பூஜை, வேதகோஷம், ராஜஉபசாரம், ஜயாதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கலசம், கோபுர விமானம் பிரவேசம் நடைபெற்றது. காலை 10. 45 மணிக்கு கடம் புறப்பட்டு, வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் "ஓம் சக்தி கோஷம் விண்ணை முட்ட,கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.காமயகவுண்டன்பட்டி அர்ச்சகர் முத்துக்குமரவேல் குருக்கள், கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள். இந்த கும்பாபிஷேகத்தின் போது, கோவை ஸ்ரீ விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, ஒக்கலிகர் சங்க கவுரவ தலைவர் மோகன்தாஸ், திருப்பணிக்குழு தலைவர் பரமுவேல், எம்.எல்.ஏ.,க்கள் தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி),ராமகிருஷ்ணன் (கம்பம்), முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தமிழக ஒக்கலிக கவுடர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் தலைவர் கணபதி,பொதுச்செயலாளர் ஜனகரன், இளைஞரணி தலைவர் ஜோதிமணி, தென்மாவட்ட ஒக்கலிகர் சங்க தலைவர் உடையாளி, பேரூராட்சி தலைவர் சாந்திரவீந்திரன், மூன்று மாவட்ட ஒக்கலிகர் சங்க தலைவர் ராஜேந்திரன், தேனி மாவட்ட தலைவர் பிரகாஷ், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் காலை முதல் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பூஜாரி கிட்ணன், திருப்பணிக்குழு தலைவர் பரமுவேல், செயலாளர் ஜேப்பியார், பொருளாளர் மணிகன்டன், துணை தலைவர் ராசு, துணை செயலாளர் ரெங்கேஸ்வரன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். வட்டமிட்ட கருடன் கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 10.45 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்ற போது, கோபுரத்திற்கு மேல் கருடன் வானில் வட்டமிட்டது. கருடபகவானை கண்ட பக்தர்கள் "ஓம் சக்தி "பராசக்தி என முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !