உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குட விழா!

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குட விழா!

காரைக்குடி : காரைக்குடி,முத்துமாரியம்மன் கோயில், பால்குட பெருவிழா விமரிசையாக நடந்தது. காரைக்குடியில் அருள்பாலித்து வருகிறார், மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன். இந்த தேவிக்கு "சீதளா தேவி என்ற பெயரும் உண்டு. இங்கு மாசி பங்குனி விழா, ஆண்டுதோறும் 36 நாட்கள் விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு பங்குனி விழா, கடந்த 11-ம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று, காலை 8 மணிக்கு முத்தாலம்மன் கோயிலிலிருந்து, கோயில் காவடி, பால்குடம், அக்னிகாவடி, அக்னிச்சட்டி புறப்பட்டு, கோயிலை வந்தடைந்தது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில் நடந்தது. மாலை 4 மணிக்கு, கோயில் கரகம், மது, முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு, பருப்பூரணி கரையில் கரைக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !