உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடி கோவிலில் உற்ஸவ விழா துவக்கம்!

மன்னார்குடி கோவிலில் உற்ஸவ விழா துவக்கம்!

மன்னார்குடி: மன்னார்குடியிலுள்ள, ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி பிரம்ம உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக நேற்று துவங்கியது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோவில் வைணவ ஸ்தலங்களில் புகழ் பெற்றது. தென் திருப்பதி எனவும்,தென் துவாரகை எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு, ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனி பிரம்ம உற்ஸவ விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பர். அதன்படி, நடப்பாண்டு உற்ஸவ விழா, நேற்றுக்காலை, 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. பங்குனிப் பெருவிழாவையொட்டி, செங்கமலத்தாயார்,பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு ஹனுமார் ஸ்வாமி உருவம் பொறித்த துவஜா ரோஹனம் என்னும் கொடியேற்று நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின்னர், கொடி சப்பரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, 18 நாட்கள் பிரம்ம உற்ஸவத்தில். 18 வாகனங்களில் தோன்றி பெருமாள் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !