ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி விழா துவங்கியது!
ADDED :4255 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில், பூக்குழி திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி காலையில் ,யாகசாலை பூஜை, காப்பு கட்டுதல் நடந்தது. கொடிப்பட்டம், நகரைசுற்றிகொண்டு வரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, பூஜைகள் நடந்தன ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 30ம் தேதி மதியம் 1.30 மணிக்கு, பூக்குழி இறங்குதல் நடக்கிறது.