மகாபாரத சொற்பொழிவை ரசித்த வெளிநாட்டினர்!
ஆனைமலை : சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து டோபியாஸ் என்பவரின் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட வெளிநாட்ட வர்கள் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் அங்கு காந்தியின் கொள்கை பற்றி படித்து வந்துள்ளனர். காந்தியை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் விதமாக இந்தியாவிற்கு வந்துள்ளனர்.மதுரையில் உள்ள இடங்களை சுற்றி பார்த்த பின், காந்திய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்படும், ஆனைமலை காந்தி ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கு இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, உணவு முறைகள், பற்றி தெரிந்து கொண்டனர். ஆனைமலையில் திரவுபதியம்மன் கோவிலில், நடைபெற்ற மகாபாரத சொற்பொழிவை ரசித்தனர். அப்போது உடன் வந்திருந்த கைடு, மகாபாரத நிகழ்ச்சியை பற்றி எடுத்துக்கூறினார். அதை கேட்டு ஆச்சரியமடைந்த வெளிநாட்டு பயணிகள், மக்கள் கூட்டத்தில் சென்று அமர்ந்தனர். அருகில் இருந்த கைடு அவர்களுக்கு சொற்பொழிவை மொழி பெயர்த்து கூறினார். மகாபாரதத்தில் வரும் சுவாரசியமான காட்சிகளை கண்டு ரசித்தனர்.