ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்
சிங்கம்புணரி : முறையூர் சிறைமீட்டி அ#யனார் புதிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,தனபூஜை,பூர்ணாகுதி யாகசாலைப்பூஜைகள் குமரேசபண்டிதர் தலைமையில் நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டது. 9.45 மணிக்கு கும்பத்தில் நன்னீராட்டு,10 மணிக்கு மகாபிஷேகம்,பட்டுசார்த்துதல்,தீபாராதனை நடந்தது. முறையூர் கிராமத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறை மீட்டி அ#யனார் அந்தாதி நூல் வெளியிடப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டன. சாமியாடி சொக்கநாதன், கிராமப் பிரமுகர்கள் சி.விஸ்வநாதன், சொ.சின்னக்கருப்பன், சி.மாணிக்கம், சி.சத்தியமூர்த்தி, கரு.கோபாலன், பெரி.தர்மலிங்கம், பெரி.சதாசிவம்,பொ.வேணுகோபால் தனலெட்சுமி, பொன்குணசேகர், சி.சின்னத்தம்பி,எஸ்.எம் . துரையரசன், அ.அழகுசேகரன், சொ.மீனாட்சிசுந்தரம், சே.செல்லையா,வீர.பழனி,சுப.மணிவண்ணன், சி.சக்திவேல் ,முறையூர் கிராமத்தினர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.