காரைக்கால் அம்மையாரின் ஊஞ்சல் சேவை!
ADDED :4257 days ago
திருத்தணி: வடாரண்யேஸ்வரர் கோவிலில், நடந்த ஊஞ்சல் சேவையில், திரளான பக்தர்கள், அம்மனை தரிசித்து வழிபட்டனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையாரின் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு உற்சவர் காரைக்கால் அம்மையார், நடராஜ சபையில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, இரவு, 7:30 மணிக்கு கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள, மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு, 8:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதில், திருவாலங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.