ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4257 days ago
சூலூர்: கோவை , தென்னம்பாளையம் ஸ்ரீஜெய ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மஹா சம்ப்ரோஷணம் நேற்று நடந்தது. சூலூர் அடுத்த தென்னம்பாளையம், விசாகா நகரில் ஸ்ரீஜெய ஆஞ்சநேயர் கோவில் புதிதாக அமைக்கப்பட்டது. ஸ்ரீவிஸ்வக்சேனர் ஆராதனையுடன் நேற்று முன்தினம் மாலை கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதற்கால ஹோமம், பூர்ணஹுதி, மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஸ்ரீஜெய ஆஞ்சநேயருக்கு மஹா சம்ப்ரோஷணம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை நடந்தது.