ஓசூர் சந்திரசூடேஸ்வரர் தெப்ப உற்சவம்!
ADDED :4258 days ago
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள, சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, தெப்ப உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு, சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள், தெப்பக்குளத்தை சுற்றி, மூன்று முறை வலம் வந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வெற்றிலையில், கற்பூரத்தை ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, நேற்று இரவு, 7 மணிக்கு, ஊர் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, இரவு, 7 மணிக்கு, புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை இரவு, 7 மணிக்கு, நகராட்சி ஊழியர்கள் சார்பில், பல்லக்கு உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, வரும், 22ம் தேதி, ஓசூர் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை சார்பில், பிரஹார உற்சவமும், 23ம் தேதி, வணிகவரி அலுவலர்கள் சார்பில், சயனோற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.