உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூ குண்டம் திருவிழா

பூ குண்டம் திருவிழா

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவில் பூ குண்டம் விழா கொண்டாடப்பட்டது.  விழாவையொட்டி கடந்த 6-ம் தேதி காலை 10.30 மணியளவில்  கொõடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் 6.00 மணிக்கு அக்னி கம்பம் பூச்சாட்டுதலும், 18-ம் தேதி காலை 7.00 மணிக்கு பூ குண்டம் நிகழ்ச்சியும் நடந்தது.
மாலை  6.00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, நகரில் முக்கிய வீதிகளில் அம்மனின் திருத்தேர் வீதி உலா நடந்தது.இதில்  கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !