தர்மராசர் கோவிலில் அர்ச்சுணன் தபசு
ADDED :4250 days ago
பொதட்டூர்பேட்டை: மகாபாரத அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று அர்ச்சுணன் தபசு மேற்கொண்டான். விரதம் மேற்கொண்டிருந்த பெண்களும், இதில் கலந்து கொண்டனர். பொதட்டூர்பேட்டை, திரவுபதியம்மன் உடனுறை தர்மராசர் கோவிலில், கடந்த 3ம் தேதி, அக்னி வசந்த உற்சவ திருவிழா துவங்கியது. தினமும், மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நடந்து வருகிறது.கடந்த திங்கட்கிழமை திரவுபதி, தர்மராசர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பகல் 12:00 மணியளவில், அர்ச்சுணன் தபசு நிகழ்ச்சி நடந்தது.