உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அசைந்து வந்த குன்றத்து தேர்

ஆடி அசைந்து வந்த குன்றத்து தேர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நான்கு மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையை சுற்றி தேர் வலம் வந்தது. இன்று(மார்ச் 22) தீர்த்த உற்சவம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 14ம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று தேராட்டம் நடந்தது. காலை 5.30 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. காலை 6.31 மணிக்கு புறப்பட்ட தேர், நான்கு மணிநேரம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் நகர்ந்து வலம் வந்து, காலை 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது. இரவு சுவாமி, தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !