சிறுவாபுரியில் லட்சார்ச்சனை
ADDED :4250 days ago
சிறுவாபுரி: பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை லட்சார்ச்சனை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை (23ம் தேதி) லட்சார்ச்சனை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, பாலசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகமும், தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, செட்டிநாடு சிறுவாபுரி அபிஷேக வழிபாட்டு குழுவினர் செய்துள்ளனர். மேலும், காலையும், மதியமும் பக்தர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.