மயிலம் முருகன் கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா
ADDED :4250 days ago
மயிலம், விழுப்புரம், மயிலம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரதிருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 12-ம் தேதியும், தெப்பல் உற்சவம் 13-ம் தேதியும், முத்துபல்லக்கில் சாமி ஊர்வலம் 14-ம் தேதியும் நடக்கிறது.மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இதையொட்டி தினந்தோறும் இரவு வெவ்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.விழாவையொட்டி, சாமி ஊர்வலமாக செல்லும் பல்வேறு வாகனங்கள் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வாகனங்கள் சீரமைக்கப்பட்டு, பல்வேறு வகையான வண்ணங்கள் தீட்டப்படுகின்றன.