உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் 26–ம் தேதி குண்டம் விழா

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் 26–ம் தேதி குண்டம் விழா

ஊஞ்சலூர்:   ஈரோடு மாவட்டம்  ஊஞ்சலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி மாத குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவுக்காக கடந்த 11–ம் தேதி பூச்சாட்டப்பட்டது. அன்று இரவு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. கடந்த 17–ம்  தேதி கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. அன்று முதல் சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து தினமும்   உற்சவர் அம்மனின் ஊர்வலமும், லவண்ட சாமி உலாவும் நடைபெற்று வருகிறன.
 
வரும் 26–ம்  தேதி  கோவில் முன் 62 அடி நீள குண்டம் அமைக்கப்படும். அன்று மாலை 15 நாட்கள் விரதம் இருந்த ஆண் பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள். மேலும் பெண்கள் அக்னி சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள். மறுநாள் (வியாழக்கிழமை) பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், கிடாய் வெட்டுதலும், மாலை முக்கிய விழாவான தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !