உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் சிலைகள் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

கோதண்டராமர் கோவிலில் சிலைகள் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

வேலூர்: வேலூர் மாவட்டம், சிப்காட்டை அடுத்த அவரக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது.  ஆகம சாஸ்திரப்படி கோவில் புதுப்பிக்கப்பட்டு ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டு கடந்த பிப்.. 9-ம்  தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. கோவில் கருவறையில் மூலவர் சிலைகளாக ராமர், சீதா, லட்சுமணர் ஆகிய சிலைகள் மீது கடந்த 3 நாட்களாக காலை 6.30 மணியளவில் சூரிய ஒளி முழுமையாக இந்த சிலைகள் மீது விழுகிறது. இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை நீடிப்பதாக  தகவல் பரவியதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்   சூரிய ஒளி விழும் அதிசய காட்சியை பார்த்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !