உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா

கமுதி,: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்கொடுமலூர் ஸ்ரீகுமரையா  கோயிலில்  பங்குனி உத்திர திருவிழா, நடைபெற்றது.   விழாவை முன்னிட்டு காலையில் வேட்டை பூஜையும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையும் நடைபெற்றன. பக்தர்கள் ஏராளமானோர் பல்வேறு காவடிகள் தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர், பஞ்சாமிர்தம், திருநீறு, இளநீர் உள்ளிட்ட 33 அபிஷேகங்களுடன் சிறப்பு தீபõராதனை பூஜைகள் நடைபெற்றன.  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !