உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

நாமக்கல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

பரமத்தி வேலூர் : ;நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூரில் மிகவும் பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் திருத் தேர் விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. வருகிற 23-ம் தேதி மறுகாப்புக் கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெறுகிறது. வரும்  30ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு   சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. 31-ம் தேதி வடிசோறு, பரிவட்டம் சூட்டுதல் , ஏப்.1ம் தேதி காலை  மகா மாரியம்மன் கோயில் திருத் தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !