உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நாளை காவடி விழா

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நாளை காவடி விழா

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள  மகா மாரியம்மன் கோயிலில் பாடைக் காவடி திருவிழா  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது.இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல், 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முக்கிய விழாவான பாடைக் காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.  தொடர்ந்து, மாலையில் செடில் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !