உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

நல்லூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

கந்தம்பாளையம்: பரமத்தி தாலுகா நல்லூரில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன், பொன்காளியம்மன், வரதராஜ பெருமாள் சாமி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் பங்குனி திருவிழாவையொட்டி பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் தினமும் இரவு கரகம், பூவோடு எடுத்து கோவிலை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 24–ம் தேதி காலை மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு, மாரியம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம், தீபாராதனை,  பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் நடை பெறும்.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !