அலகுமலை கோவிலில்ஏப்., 14ல் சித்திரை விழா
திருப்பூர்: திருப்பூர் திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில், அலகுமலை முத்துக்குமார பால
தண்டாயுதபாணி கோவிலில், சித்திரை திருவிழா, ஏப்., 14ல் நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், நடந்தது. திருக்கோவில் பக்தர் பேரவை மாநில செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். அலகுமலை கோவில் அறங்காவலர் சின்னு முன்னிலை வகித்தார்.அதில், "ஏப்., 14ல் சித்திரை திருவிழா, காலை 6.00 மணிக்கு கிரிவலத்துடன் துவங்கும். தொடர்ந்து, சித்திரை கனி, தரிசன பூஜை, அபிஷேகம், ஆராதனை, நீர்மோர் நிலையம் துவக்கம், பாரத மாதா பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும். போதுமான அளவு குடிநீர் வசதி, அடிப்படை வசதி செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு தேவைப்படும் பொருட்களை பொதுமக்களி டம் இருந்து சேகரிக்க வேண்டும், என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருக்கோவில் பக்தர் பேரவை உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் பங்கேற்றனர்.