உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!

ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!

திருப்பூர் : திருமுருகன்பூண்டி, ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில், 34வது ஆண்டு பொங்கல் குண்டம் திருவிழா நடந்தது. கடந்த 11ம் தேதி துவங்கிய பூச்சாட்டு விழாவையடுத்து, அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, கும்பம், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், குண்டத்துக்கு பூ போடுதல், திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடந்தன. பொங்கல் நாளன்று பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும், மாலை பூவோடு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா உள்ளிட்டவை நடந்தன. மஞ்சள் நீராட்டு, மறு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகள், கோவில் தலைமை பூசாரி குமாரவேல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !