ஊட்டியில் மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
ADDED :4229 days ago
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இவ்விழாவையொட்டி நேற்று அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ரத வாகனத்தில் எழுந்தருளி திரு வீதி உலா நடந்தது. இதனை சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் தரிசித்தனர்.