திருவண்ணாமலை இஞ்சி மேடு கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :4228 days ago
செஞ்சி: திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சி மேடு பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் கல்யாண வரத ஆஞ்நேயருக்க நேற்று மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு பாலாஜி பட்டாச்சார்யார் தலைமையில் வரதாஜபெருமாள் , பெருந்தேவி தாயார், கல்யாண வரத ஆஞ்சநேயர், ராமர்,சீதை, லட்சுமணர்,கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.
காலை 10 மணிக்கு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் ராகவன் பட்டாச்சார்யார் தலைமையில் 22 பட்டாச்சாரியார்கள் சேர்ந்து சிறப்பு ஹோமம் நடத்தினர். ஒரு லட்சம் மந்திரங்களும், தன்வந்திரி, சுதர்சன , நரசிம்ம,கருட ஹோமங்கள் நடந்தன. பகல். 1.30 மணிக்கு தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது.