உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமாரியம்மனுக்கு பிரமாண்ட கோவில்: வேட்பாளர்களுக்கு பக்தர்கள் கிடுக்கிப்பிடி!

பெரியமாரியம்மனுக்கு பிரமாண்ட கோவில்: வேட்பாளர்களுக்கு பக்தர்கள் கிடுக்கிப்பிடி!

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டிட வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கும் வேட்பாளருக்கு, தங்களின் ஓட்டுகள், என, ஆலோசனை கூட்டத்தில், பக்தர்கள் தெரிவித்தனர். ஈரோட்டில் பெரியமாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம், இயக்கத்தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. திட்டக்குழு தலைவர் பூசப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர்., சிக்னலில் ரவுண்டானா அமைக்கும் பணியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 80 அடி சாலையை உடனடியாக திறக்க வேண்டும். ரவுண்டானா திட்டத்துக்கு தனியார் நிலத்தை கையகப்படுத்திய, மாவட்ட நிர்வாகம், 80 ரோட்டில் உள்ள, 12.66 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த மறுப்பது ஏன். பெரியமாரியம்மன் குண்டம் தேர்த்திருவிழாவில் ஏப்ரல், மூன்றாம் தேதி நடக்கும் பொங்கல் வைபோக நிகழ்ச்சிக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்களை திரட்டப்படுவது. 80 அடி திட்டச்சாலையை திறந்து, 12.66 ஏக்கர் நிலத்தை மீட்டு, பெரியமாரியம்மனுக்கு பிரமாண்ட கோவில் அமைக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பக்தர்களின் ஆதரவை பெற கருத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !