உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் பூமாரி ரேணுகாதேவியம்மன் கோவில் கொடியேற்றம்!

திருப்புவனம் பூமாரி ரேணுகாதேவியம்மன் கோவில் கொடியேற்றம்!

திருப்புவனம் : திருப்புவனம்புதூரில் உள்ள பூமாரிரேணுகாதேவி அம்மன் கோயிலில், பங்குனி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பூமாரி ரேணுகாதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலை 6 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. வீரமணி பட்டர் தலைமையில், குருக்கள் கொடிமரத்திற்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து, 10 நாட்கள் பங்குனி உற்சவ திருவிழா நடைபெறும். பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம்கண் பானை, கரும்பு தொட்டில், பிள்ளை வரம் பொம்மை நேர்த்தி செய்து, அம்மனை வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !