உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆமை குளத்தில் காமன் திருவிழா: நள்ளிரவில் விழித்து ரசித்த மக்கள்!

ஆமை குளத்தில் காமன் திருவிழா: நள்ளிரவில் விழித்து ரசித்த மக்கள்!

கூடலூர்: கூடலூர் ஆமைக்குளத்தில் நடந்த காமன் திருவிழாவை, ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைக்குளத்தில்,  காமன் விழா 4ம் தேதி துவங்கியது. அதற்காக, அமைக்கப்பட்ட மேடையில், நவதானியங்களை வைத்து, அதன்மீது செவ்வரழி, ஆமணக்கு, மூங்கில், கரும்பு உள்ளிட்டவைகளை ஒன்றாக இணைந்து கட்டி வைத்து அதனை மன்மதனாக கருதி சிறப்பு வழிபாடும் நடந்தன.  மன்மதன், ரதி வேடமனிந்தவர்கள் விரதமிருந்து, கிராமங்களுக்கு சென்று, நடனமாடி "கதையை பாட்டாக பாடி மக்களிடம் காணிக்கை பெற்று வந்தனர். இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, மன்மதன் - ரதி திருமண விழாவும், அதனை தொடர்ந்து, சிவனின் தவத்தை கலைக்க, அவர் மீது மன்மதன் கரும்பால் செய்யப்பட்ட அம்பில் பூக்களை விட, பூக்கள் உடலில் பட்டு தவம் கலையும் சிவன், கோபமாக நெற்றி கண்ணை திறக்க, மண்மதன் எரிந்து சாம்பலாகும் வரலாற்று நிகழ்வை, தத்ரூபமாக, ஆமைகுளம் கலைஞர்கள் செய்து காண்பித்தனர். இதனை உள்ளூர் மக்கள் விடிய விடிய கண்விழித்து கண்டு ரசித்தனர். இன்றைய நவீன உலகில், நம் பாரம்பரிய விழாக்களுக்கு இன்றும் மக்களிடம் வரவேற்பும், அதனை பாதுகாக்க வேண்டும் என்ற ஆவர்மும் உள்ளது என்பதற்கு இந்த விழா சிறந்த உதாரணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !