பழநி பங்குனி உத்திர விழா: ஏப்.,7ல் துவக்கம்!
ADDED :4233 days ago
பழநி: கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற, பழநி பங்குனி உத்திர விழா, ஏப்.,7 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முதல்நாள் பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, திருஆவினன்குடி கோயிலிலுக்கு எழுந்தருளி, காலையில் கொடியேற்றமும், உச்சிகாலத்தில் மலைக்கோயிலில் காப்புகட்டுதலும் நடக்கிறது. ஆறாம் நாள், ஏப்., 12 ல் திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாள் (ஏப்.,13 ல்) மாலையில் பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏப்.,16 ல் விழா நிறைவு பெறுகிறது.