திருநெல்வேலி அழகிய நம்பிராயர் கோயிலில் தேரோட்டம்!
ADDED :4247 days ago
திருநெல்வேலி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 79 வது திவ்ய தேசம். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு. பிரசித்திபெற்ற இக்கோயிலில் கடந்த 16ம் தேதி கொடியேற்றப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.