உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!

கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழாவையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கண்டாச்சிபுரம் சார்ந்த மடவிளாகம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சுனன் சுவாமிகளுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மடவிளாகம் மாணவரணி சார்பாக பக்தர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சித் தலைவர் கண்ணாயிரம், அறங்காவலர் சுப்பிரமணி, பாலகிருஷ்ண அய்யர், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், துணைத் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 7 மணியளவில் தீமிதி திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !