ஈஸ்வரன், பெருமாள், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம்!
ADDED :4235 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் பாலமுருகன் ஆலய உட்புறத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன், பெருமாள், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் பாலமுருகன் ஆலய உட்புறத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன், பெருமாள், பரிவார தேவதைகளுக்கு நேற்று முன்தினம் சுவாமி கரிக்கோலம் வருதல் நடந்தது. அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் முடிந்து ஹோமம் நடந்தன.நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் மகா தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு கடம் புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் கிரி அய்யர் தலைமையில் நடந்தது.