உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

விழுப்புரம் யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

விழுப்புரம்; விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் பகுதியில் யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில் யோக ஆஞ்சநேயர் கோவில், புனரமைப்பு செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடும், 9:50 மணிக்கு விமான கலச கும்பாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !