கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா!
ADDED :4232 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வரும் ஏப்ரல், 4ம்தேதி முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது. இதில், 8ம்தேதி காலை கொடியேற்று விழா நடக்கிறது. மாலை சுவாமி அம்மன்திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை பல்லக்கு, மாலை சிறப்பு வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும் 10ம் தேதி ஸ்வாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11ம்தேதி திருக்கல்யாணம், 13ம்தேதி தேர்த்திருவிழா உற்சவம் நடக்கிறது. மேலும், 15ம்தேதி விடையாற்றி, 16ம்தேதி ஊஞ்சல் உற்சவம், 17ம்தேதி பிராயசித்த அபிஷேகம் ஆகிய விழாக்கள் நடக்கிறது. தினமும் மாலை நாதஸ்வர இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சி உண்டு. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், கோவில் செயல்அலுவலர் முருகன் செய்து வருகின்றனர்.