மயிலம் மயிலியம்மன் கோவில் பங்குனித் திருவிழா!
ADDED :4218 days ago
மயிலம்: மயிலம் பங்குனித் திருவிழாவில் மயிலியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மயிலம் மயிலியம்மன் கோவில் திருவிழா கடந்த 26 ம் தேதி துவங்கியது. இரவு மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், தயிர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. நேற்று 28ம் தேதி காலை சுவாமிக்கு மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மகா தீபாரதனை நடந்தது. மாலை அம்மனுக்கு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. இரவு 10 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது.