மழுவேந்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை!
ADDED :4218 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மழுவேந்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் மழுவேந்திய விநாயகர், திரவுபதி அம்மன், வள்ளலார் மடம் கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது. மண்டலாபிஷேக பூஜை பூர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகமும், 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து சங்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூஜைகளை சிவா குருக்கள், கோட்டீஸ்வரன் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.