உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை அருகே ஆற்றில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

நாகை அருகே ஆற்றில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

நாகப்பட்டினம்: நாகை அருகே ஆற்றில் 6 ஐம்பொன்சிலைகள் மற்றும் 2 பெட்டகங்கள் கண்டெடுக்கப்பட்டன. நாகை அடுத்த கலசம்பாடியைச் சேர்ந்தவர்கள் சுமதி மற்றும் கல்யாணி. இருவரும் நேற்று மதியம் தென்கால் ஒரத்துார் கடுவையாற்றில் மீன்பிடித்தனர்.  அப்போது, சேற்றில் புதைந்த நிலையில் சிலைகள் இருந்தன. இதுகுறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். கிராம மக்கள் கும்பலாக வந்து ஆற்றில் இறங்கி, மூன்றரை அடி உயர விளக்கு நாச்சியர், ஒன்றரை அடி உயர விநாயகர், சரஸ்வதி, லெட்சுமி, ஒன்னேகால் அடி உயர சந்திரசேகரர், முக்கால் அடி உயர மற்றொரு லெட்சுமி  சிலைகள் என ௬ சிலைகள் மற்றும் ௨ பெட்டகங்களை  ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் ஆனவை. இது குறித்து தகவலின் பேரில், வேளாங்கண்ணி போலீசார், சிலைகள் மற்றும் பெட்டகங்களை கைப்பற்றி, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எந்த நுாற்றாண்டை சேர்ந்தது, ஏதாவது கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா என  விசாரித்து வருகின்றனர். வருவாய்த்துறையினரும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !