உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ,வி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: குழந்தைகளுடன் பெண்கள் வழிபாடு!

ஸ்ரீ,வி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: குழந்தைகளுடன் பெண்கள் வழிபாடு!

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூக்குழி திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடந்தது. பூப்பல்லாக்கு 25ம் தேதி நடந்தது. முக்கிய திருவிழாவான பூக்குழி இறங்குதல், நேற்று மதியம் நடந்தது. இதையொட்டி காலையில், அம்மனுக்கு,அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் மஞ்சள், சிவப்பு ஆடைகளை அணிந்து, நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்து ,கோயிலில் பூக்குழி இறங்கினர். இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா நாட்களில், தினமும் சமய சொற்பொழிவு நடந்தது. விழாவின் கடைசி நாளான இன்று 12 மணிக்கு ,தேரோட்டம் நடக்கிறது. மாலையில் யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளலும், மஞ்சள் நீராட்டும்
நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !