புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு அலங்காரம்
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புவனகிரியில் மகான் ராகவேந்திர சுவாமிகள் அவதார இல்லம், கோவிலாக நிர்மானிக்கப்பட்டு அங்கு பல்வேறு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இன்று கார்த்திகை இரண்டாவது வியாழக்கிழமையை முன்னிட்டு மந்த்ராலய மரபின்படி, சுவேத நதி தீர்த்தத்துடன் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து ராகவேந்திரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கவுரவதலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜைகளை ரமேஷ் ஆச்சாரிய குழுவினர் நடத்தினர். இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.