உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

 ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்ற நடந்தது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் 66 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, 25ம் தேதி முதல் கால யாக சாலை பூஜை, 26ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை நான்காம் கால பரிவார மூர்த்திகள் யாக பூஜைகளைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் நாகராஜ், சோமு ஆகியோர் தலைமையில் கடம் புறப்பட்டு, கோவில் விமானத்திற்கு வந்தடைந்தது. காலை 9.30 மணியளவில் அரோகரா கோஷம் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் ஐகோர்ட் நீதிபதி ரவிச்சந்திரபாபு, கந்த விலாஸ் ஜெயக்குமார், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், நிர்வாகிகள் சிவமுருகன், செல்வகுமார், ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், பூக்கடை பாபு, இந்து அறநிலையத்துறை விழுப்புரம் மண்டல இணை ஆணையர் சிவலிங்கம். கள்ளக்குறிச்சி  உதவி ஆணையர் ரமேஷ், மண்டல செயற் பொறியாளர் யோகராஜ், ஆய்வாளர் புருஷோத்தமன், செயல் அலுவலர் ராசாத்தி, எழுத்தர் விமல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கறே்றனர். தொடர்ந்து, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷகே, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மண்டலாபிஷேக பூஜை துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !