பள்ளிவாசலில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை!
ADDED :4209 days ago
கோத்தகிரி : கோத்தகிரி பள்ளிவாசலில் மழைவேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், நீர் ஆதாரங்கள் வறண்டு, விவசாய பயிர்கள் கருக தொடங்கியுள்ளன.மழைப்பெய்தால்தான் விடிவு என்ற நிலையில், மக்கள் மழையை எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், கோத்தகிரி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில், அப்துல் மஜிது இம்தாதி தலைமையில், மழைவேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இதில், கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் திரளாக பங்கேற்றனர்.