உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப் 4-- ல் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழா

ஏப் 4-- ல் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழா

சிதம்பரம்:  சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வடக்குகோபுரம் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப். 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இக்கோயில் திருப்பணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு இடிக்கப்பட்டது.    கடந்த ஜனவரி 24-ம் தேதி நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மடம் சார்பில் ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் ரூ.4 கோடி செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்படும் என தெரிவித்தார். இதன்படி ஸ்ரீபாண்டியநாயகம் கோயிலில் வருகிற 4-ம் தேதி   இரவு 8 மணிக்கு மேல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  , ஏப். 12-ம் தேதி  தேர் திருவிழா, 13-ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !