தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
ADDED :4209 days ago
வேலாயுதம்பாளையம் : கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் தோட்டக் குறிச்சி கிராமத்தில் மாரி யம்மன் கோவில் பங்குனி மாத விழா கடந்த 26–ம் தேதி துவங்கியது. 4 நாட்கள் திருவிழா நடை பெற்ற இத்திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியில் வடிசோறு வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியன்று அம்மன் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் மாறு வேடங்களில் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து சென்றனர். மாலை 5 மணி அளவில் கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கினர் .3–ம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. .