சமயபுரம் மாரியம்மன் கோவில் பூக்கள் தூவி வழிபாடு
ADDED :4206 days ago
ஸ்ரீரங்கம் ; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்று ஞாயிறு பூச்சொரிதல் விழா நடந்தது. பச்சை பட்டினி விரதம் தொடங்கியதில் இருந்து அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் படைக்கப்படுவதில்லை. நீர் மோர், பானகம், கறும்புச்சாறு ஆகியவை மட்டுமே படைக்கப்பட்டு வருகிறது. முக்கிய விழாவான நேற்று பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை தூவி அபிஷேகம் செய்து வழிபட்டனர்.