திற்பரப்பு மகாதேவர் கோவில் திருவிழா
ADDED :4206 days ago
திற்பரப்பு: குமரி மாவட்டத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்தில் 3-வது சிவதலம் திற்பரப்பு மகாதேவர் கோவில். இந்த கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கணபதிஹோமம், ராமாயண பாராயணம், கொடியேற்றம் போன்றவை நடந்தன. தொடர்ந்து உச்சகால பூஜை, கலசாபிஷேகம், அன்னதானம், தீபாராதனை போன்றவை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.