திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனித் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4206 days ago
திருச்சி: திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தலமாக போற்றி புகழப்படும் திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று தேரோட்டம் நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு பங்குனி தேரோட்ட விழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் பக்தர்களுக்கு ஜம்புகேஸ்வரர் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.