உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!

மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!

சேத்தூர் : சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பூக்குழி விழா, மார்ச் 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மன் அக்கினிசட்டி எடுத்தல், 4,5ம் நாளன்று சிம்ம வாகனம்,7ம் நாளான்று பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. 9ம் விழாவை முன்னிட்டு, மாலையில் காப்பு கட்டிய பக்தர்கள், பூ இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பூ இறங்கிய பக்தர்களுக்கு பின்னால், முளைப்பாரி,ஆயிரங்கண் பானை எடுத்து வந்தனர். நேற்று பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள் சார்பில், நீர்,மோர்,பானக்கரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !